எட்டாம் வகுப்பு - தமிழ் - மனப்பாடச் செய்யுள் பகுதி - | Tamil easy study

எட்டாம் வகுப்பு - தமிழ் -  மனப்பாடச்  செய்யுள்  பகுதி -   | Tamil easy study


  கவிதைப்பேழை   

-------------------------------------------------------------------------------------------------------------
இயல்  - ஒன்று 

  1. தமிழ்மொழி வாழ்த்து

*வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி 
வாழிய வாழியவே! 

வான மளந்தது அனைத்தும் அளந்திடு 
வண்மொழி வாழியவே!
 
ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
 இசைகொண்டு வாழியவே!
 
எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி 
என்றென்றும் வாழியவே! *

                                                                - பாரதியார்


---------------------------------------------------------------------------

கவிதைப்பேழை                 


   ஓடை


*ஓடை ஆட உள்ளம் தூண்டுதே! –கல்லில்
 உருண்டு தவழ்ந்து நெளிந்து பாயும் 
                                                            (ஓடை ஆட…)
 பாட இந்த ஓடை எந்தப்
     பள்ளி சென்று பயின்ற தோடி! 
ஏடு போதா இதன்கவிக் கார் 
      ஈடு செய்யப் போராரோடி! 
                                                       (ஓடை ஆட…) 
நன்செய் புன்செய்க்கு உணவை ஊட்டி 
     நாட்டு மக்கள் வறுமை ஓட்டிக் 
கொஞ்சிக்  குலவிக் கரையை வாட்டிக் 
       குளிர்ந்த புல்லுக்கு இன்பம் கூட்டி
                                                                   (ஓடை ஆட…) 
நெஞ்சில் ஈரம் இல்லார் நாண 
   நீளு ழைப்பைக் கொடையைக் காட்டிச் 
செஞ்சொல் மாதர் வள்ளைப் பாட்டின் 
       சீருக்கு ஏற்ப முழவை மீட்டும்* 
                                                              (ஓடை ஆட…)


                                                           - வாணிதாசன்


----------------------------------------------------------------------

வாழ்வியல்

  திருக்குறள்

நடுவுநிலைமை

 1. தக்கார் தகவிலர் என்பது அவரவர்
      எச்சத்தால் காணப் படும்*.

கூடா ஒழுக்கம்

4. கணைகொடிது யாழ்கோடு  செவ்விதுஆங்கு அன்ன 
    வினைபடு பாலால் கொ*.
கல்லாமை


6. விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
   கற்றாரோடு ஏனை யவர்

குற்றங்கடிதல்

8. தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்
   என்குற்றம் ஆகும் இறைக்கு*


                                                               - திருவள்ளுவர்
--------------------------------------------------------------------------

இயல்    மூன்று
 
நோயும் மருந்தும் 

*பேர்தற்கு அரும்பிணி தாம்இவை அப்பிணி 
தீர்தற்குஉரிய திரியோக மருந்துஇவை
 ஓர்தல் தெளிவோடு ஒழுக்கம் இவையுண்டார் 
பேர்த்து பிணியுள் பிறவார் பெரிது இன்பமுற்றே*



வருமுன் காப்போம்


* உடலின் உறுதி உனடயவரே 
       உலகில் இனபம் உடையவராம் 
டமும் பொருளும் நோயாளிக்கு
      இனிய வாழவு தந்திடுமோ 

சுத்தம் உள்ள இடமெங்கும் 
      சுகமும் உணடு நீ அதனை
 நித்தம் நித்தம் பேணுவையேல்
       நீணட ஆயுள்  பெறுவாயே !

காலை மாலை உலாவிநி்தம்
       காற்று வாங்கி வருவோரின் 
காலைத் தொட்டுக் கும்பிட்டுக்
     காலன் ஓடிப் போவானே ! * 

                                                

                          -கவிமணி தேசிக விநாயகனார்


--------------------------------------------------------------------------
இயல்      நான்கு


 கல்வி அழகே அழகு

கற்றோருக்கு கல்வி நலனே கலனல்லால் 
மற்றோர்அணிகலம் வேண்டாவாம் -  முற்று
முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா  யாரே
அழகுக்கு அழகு செய்வார்

                                                       
                                                                 -  குமரகுருபரர்

  -------------------------------------------------------------------------------------------
இயல்       ஐந்து   


பாடறிந்து  ஒழுகுதல்


*ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல் 
போற்றுதல் என்பது புணர்ந்தாரை ப் பிரியாமை
 பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல் 
அன்பு எனப்படுவது தன்கிளை செறாஅமை 
அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோ ன்றல் 
செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை 
நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை 
முறை எனப்படுவது கண்ஓடாது உயிர் வௌவல் 
பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்* 



-------------------------------------------------------------------------------------------
  திருக்குறள்

தெரிந்து வினையாடல் 

2. இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து 
   அதனை அவன்கண் விடல்.*

சொல்வன்மை  

7. கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் 
  வேட்ப மொழிவதாம் சொல்.*

8. சொல்லுக சொல்லைப் பிறிதுஓர்சொல் அச்சொல்லை 
   வெல்லும்சொல் இன்மை அறிந்து.* 



                                                                                    - திருவள்ளுவர்

----------------------------------------------------------------------------------------------------------

இயல்   ஏழு 

படை வேழம்

கலிங்கர் தோற்றுச் சிதைந்தோடல் *


வழிவர் சிலர்கடல் பாய்வர் வெங்கரி 
       மறைவர் சிலர்வழி தேடி வன்பிலம்
 இழிவர் சிலர்சிலர் தூறு மண்டுவர் 
        இருவர் ஒருவழி போகல் இன்றியே (2)

ஒருவர் ஒருவரின் ஓட முந்தினர் 
      உடலின் நிழலினை வெருவி அஞ்சினர் 
அருவர் வருவர் எனா இறைஞ்சினர் 
           அபயம் அபயம் எனநடுங்கியே* (3)
                                                 


                                                                   -  செயங்கொண்டார்

------------------------------------------------------------------------------------------

இயல்   எட்டு 


ஒன்றே  குலம் 

*ஒன்றே  குலமும்  ஒருவனே  தேவனும் 
நன்றே  நினைமின்  நமனில்லை  நாணாமே 
சென்றே  புகும்கதி  இல்லைநும்  சித்தத்து 
நின்றே  நிலைபெற  நீர்நினைந்து  உய்ம்மினே


படமாடக் கோயில் பகவற்குஒன்று  ஈயில் 
நடமாடக் கோயில்  நம்பர்க்குஅங்கு  ஆகா
 நடமாடக் கோயில்  நம்பர்க்குஒன்று  ஈயில் 
படமாடக் கோயில் பகவற்குஅது ஆமே*            


                                                                       - திருமூலர்

--------------------------------------------------------------------------------------
  திருக்குறள்

படைச்செருக்கு


 1. கான முயல்எய்த அம்பினில் யானை
 பிழைத்தவேல் ஏந்தல் இனிது.*

நட்பு

3. நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் 
    பண்புடை யாளர் தொடர்பு.*

பண்புடைமை

 9. பண்புடையார்ப் பட்டுஉண்டு உலகம் அதுஇன்றேல் 
    மண்புக்கு மாய்வ துமன்.*

                                                                          


                                                                          - திருவள்ளுவர்

--------------------------------------------------------------------------------------------











Comments

Popular posts from this blog

எட்டாம் வகுப்பு - தமிழ் - இயல் - 1 புத்தக வினாக்கள்| மொழியை ஆள்வோம்! |மொழியோடு விளையாடு |Tamil easy study

எட்டாம் வகுப்பு - தமிழ் - இயல் - 2-கவிதைப்பேழை - புத்தக வினாக்கள் | Tamil easy study

எட்டாம் வகுப்பு - தமிழ் - இயல் -1 புத்தக வினாக்கள் | Tamil easy study 6 ,7 ,8