எட்டாம் வகுப்பு - தமிழ் - இயல் - 1 புத்தக வினாக்கள்| மொழியை ஆள்வோம்! |மொழியோடு விளையாடு |Tamil easy study

எட்டாம் வகுப்பு - தமிழ் - இயல் - 1 புத்தக வினாக்கள்| மொழியை ஆள்வோம்! |மொழியோடு விளையாடு |Tamil easy study

------------------------------------------------------------------------------------

 மொழியை ஆள்வோம்!

அகரவரிசைப்படுத்துக.

 எழுத்து, ஒலிவடிவம், அழகுணர்ச்சி, ஏழ்கடல், இரண்டல்ல, ஊழி, உரைநடை, ஒளகாரம், ஓலைச்சுவடிகள், ஆரம்நீ, ஈசன், ஐயம். 

விடை   :

அழகுணர்ச்சி, ஆரம்நீ , இரண்டல்ல,ஈசன்,உரைநடை,ஊழி , எழுத்து, 

ஏழ்கடல், ஐயம். , ஒலிவடிவம், ஓலைச்சுவடிகள், ஒளகாரம் .


அறிந்து பயன்படுத்துவோம். 

       மரபுத் தொடர்கள் 

 தமிழ் மொழிக்கெனச் சில சொல் மரபுகள் உள்ளன. அவை பழங்காலம் முதலே பின்பற்றப்படுகின்றன.

     பறவைகளின் ஒலிமரபு 

ஆந்தை அலறும்      குயில் கூவும்          மயில் அகவும்     
  
 காகம் கரையும்     கோழி கொக்கரிக்கும்     கிளி பேசும்

சேவல் கூவும்      புறா குனுகும்         கூகை குழறும்       

   தொகை மரபு

 மக்கள் கூட்டம்     ஆநிரை      ஆட்டு மந்தை

 வினைமரபு

சோறு உண்        தண்ணீர் குடி    பூக் கொய் 

முறுக்குத் தின்     பால் பருகு     இலை பறி 

சுவர் எழுப்பு    கூடை முடை     பானை வனை

--------------------------------------------------------------------------------------

சரியான மரபுச் சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக .

 1. கோழி _____. (கூவும்/கொக்கரிக்கும்) 

விடை  : கொக்கரிக்கும்) 

2. பால் _____. (குடி/ பருகு)

விடை  : பருகு)

 3. சோறு _____. (தின்/உண்) 

விடை  : உண்

4. பூ _____. (கொய்/பறி) 

விடை  : கொய்

5. ஆ _____.  ( நிரை/மந்தை)

விடை  :  நிரை

--------------------------------------------------------------------------------------------


 மரபுப் பிழையை நீக்கி எழுதுக.

          சேவல் கொக்கரிக்கும் சத்தம் கேட்டுக் கயல் கண் விழித்தாள். பூப்பறிக்க நேரமாகி விட்டதை அறிந்து தோட்டத்திற்குச் சென்றாள். அங்கு மரத்தில் குயில் கரைந்து கொண்டிருந்தது. பூவைப் பறித்ததுடன், தோரணம் கட்ட மாவிலையையும் கொய்து கொண்டு வீடு திரும்பினாள். அம்மா தந்த பாலை குடித்துவிட்டுப் பள்ளிக்குப் புறப்பட்டாள்.

கூவும் கொய்ய கூவிக் கொய்ததுடன் பறித்துக் பருகிவிட்டும்


விடை  : 

       சேவல்  கூவும்  சத்தம் கேட்டுக் கயல் கண் விழித்தாள். பூக்கொய்ய நேரமாகி விட்டதை அறிந்து தோட்டத்திற்குச் சென்றாள். அங்கு மரத்தில் குயில் கூவிக் கொண்டிருந்தது. பூவைக்கொய்ததுடன் , தோரணம் கட்ட மாவிலையையும்  பறித்துக்  கொண்டு வீடு திரும்பினாள். அம்மா தந்த பாலைப்  பருகிவிட்டுப்  பள்ளிக்குப் புறப்பட்டாள்.


------------------------------------------------------------------------------------------------

  மொழியோடு விளையாடு 


பொருத்தமான பன்மை விகுதியைச் சேர்த்தெழுதுக.

 கல், பூ, மரம், புல், வாழ்த்து, சொல், மாதம், கிழமை, ஈ, பசு, படம், பல், கடல், கை, பக்கம், பா.

விடை  : 

கள் 

க்கள் 

ங்கள் 

ற்கள்

கண்கள்

ஈக்கள்

மாதங்கள் 

சொற்கள்

கிழமைகள்

பூக்கள் 

மரங்கள்

பற்கள்

மான்கள் 

பசுக்கள்

உரங்கள்

சொற்கள்

கால்கள்

மக்கள்

கரங்கள் 

கற்கள்


-------------------------------------------------------------------------------------------------

ஒரு சொல் ஒரே தொடரில் பல பொருள் தருமாறு எழுதுக.

 (எ.கா.)  அணி –   பல அணிகளை அணிந்த வீரர்கள், அணிஅணியாய்ச் சென்றனர். 

விடை  : 

படி  :  நான் பாடத்தைப் படிக்க படிக்கட்டில் அமர்ந்து படித்தேன் . 

திங்கள்  :  தைத்திங்கள் திருநாளில்  பொங்கல் பண்டிகை திங்கள் கிழமை வருகிறது .

ஆறு  :  நான் ஆறு மைல்கள் கடந்து சென்று ஆறு தேடிக் குளித்து ஆறுமணிநேரம் ஆறுமுகனை வழிபட்டேன் .


-------------------------------------------------------------------------------------------------------

சொற்களை ஒழுங்குபடுத்தி முறையான தொடராக்குக.

 1. வட்டெழுத்து எனப்படும் தமிழ் கோடுகளால் வளைந்த அமைந்த எழுத்து.

விடை  : வளைந்த கோடுகளால்  அமைந்த எழுத்து  தமிழ் வட்டெழுத்து எனப்படும் .

 2. உலகம் தமிழ்மொழி வாழட்டும் உள்ளவரையிலும். 

விடை  :  உலகம் உள்ளவரையிலும். தமிழ்மொழி வாழட்டும் .

3. வென்றதைப் பரணி பகைவரை ஆகும் பாடும் இலக்கியம்.

விடை  :  பகைவரை வென்றதைப் பாடும் இலக்கியம் பரணி ஆகும் .

4. கழுத்து பிறக்கும் இடம் உயிரெழுத்து ஆகும். 

விடை  : உயிரெழுத்து பிறக்கும் இடம் கழுத்து ஆகும். 

5. ஏகலை கலையை அம்புவிடும் தமிழ் என்றது.

விடை  : அம்புவிடும் கலையை ஏகலை என்றது  தமிழ் .


----------------------------------------------------------------------------------------------------

நிற்க அதற்குத் தக...

என் பொறுப்புகள்... 

1. எழுத்துகளைச் சரியான வரிவடிவத்தில் எழுதுவேன். 

2. அறிவிப்புப் பலகைகளில் உள்ள பிழைகளை உரியவரிடம் கூறித் திருத்தச்செய்வேன்.

விடை  :

3.  ஆசிரியர் நடத்தும் பாடங்களை அன்றாடம் படித்து முடித்து விடுவேன் .

4.  வீடு , வகுப்பறையைச் சுத்தமாக வைததிருப்பேன் .

5.  வீட்டில் என் அம்மா சமைக்கும்போது  முடிந்த உதவிகளைச் செய்வேன் .



-----------------------------------------------------------------------------------------------------












Comments

Popular posts from this blog

எட்டாம் வகுப்பு - தமிழ் - இயல் - 2-கவிதைப்பேழை - புத்தக வினாக்கள் | Tamil easy study

எட்டாம் வகுப்பு - தமிழ் - இயல் -1 புத்தக வினாக்கள் | Tamil easy study 6 ,7 ,8