எட்டாம் வகுப்பு - தமிழ் - இயல் - 1-கற்கண்டு- புத்தக வினாக்கள் | Tamil easy study

எட்டாம் வகுப்பு - தமிழ் - இயல் - 1-கற்கண்டு- புத்தக வினாக்கள்  | Tamil easy study

எழுத்துகளின் பிறப்பு -   கற்கண்டு

 புத்தக வினாக்கள்      ப.எண் -16

கற்பவை கற்றபின்

ஓரெழுத்து ஒரு மொழிகள் இடம் பெறுமாறு  ஐந்து  தொடர்கள் எழுதுக .

  ஈ -  தேநீர் கடைகளில் ஈ அதிகமாக உள்ளது

 பூ -  நான் தினமும் தலையி்ல் பூ சூடிக் கொள்வேன் . 

தை - தைத்திருநாள் தமிழர்கள் மிகவும்  சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.

தீ  -  குப்பைகளைத் தீ வைத்து  கொளுத்துவோம் .

கை -என் தோழி கை மிகவும் சுத்தமாக இருந்தது .

--------------------------------------------------------------------------

கற்பவை கற்றபின்

‘ஆய்தம்’ – இச்சொல்லில் உள்ள ஒவ்வோர் எழுத்தின் வகையையும், அது பிறக்கும் இடத்தையும் பட்டியல் இடுக.

எழுத்துகள்

ய் 

  த 

ம்

வகை

உயி்ர்

மெய்

உயிர்மெய்

மெய்

பிறக்கும் இடம்

கழத்து 

கழத்து 

மார்பு 

மூக்கு



---------------------------------------------------------------------------

மதிப்பீடு           ப.எண் -19

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 

1. இதழ்களைக் குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள் _____. 

அ) இ, ஈ   ஆ) உ, ஊ   இ) எ, ஏ   ஈ) அ, ஆ 

விடை    :   ஆ) உ, ஊ

2. ஆய்த எழுத்து பிறக்கும் இடம் ______. 

அ) மார்பு ஆ) கழுத்து இ) தலை ஈ) மூக்கு 

விடை  :  இ) தலை

3. வல்லின எழுத்துகள் பிறக்கும் இடம் _____. 

அ) தலை ஆ) மார்பு இ) மூக்கு ஈ) கழுத்து

விடை:   ஆ) மார்பு

 4. நாவின் நுனி அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள் _____.

 அ) க், ங்  ஆ) ச், ஞ்   இ) ட், ண்    ஈ) ப், ம்

விடை:  இ)  ட், ண்

 5. கீழ்இதழும் மேல்வாய்ப்பல்லும் இணைவதால் பிறக்கும் எழுத்து _____

அ) ம்    ஆ) ப்     இ) ய்    ஈ)  வ்

விடை:   ஈ)  வ்

--------------------------------------------
பொருத்துக. 

க், ங் -   நாவின் இடை, அண்ணத்தின் இடை

 ச், ஞ் - நாவின் நுனி, மேல்வாய்ப்பல்லின் அடி

 ட், ண் - நாவின் முதல், அண்ணத்தின் அடி

 த், ந் - நாவின் நுனி, அண்ணத்தின் நுனி


---------------------------------------------------------------------------

விடை:

க், ங் -  நாவின் முதல், அண்ணத்தின் அடி

 ச், ஞ் -    நாவின் இடை, அண்ணத்தின் இடை

 ச், ஞ் - நாவின் நுனி, அண்ணத்தின் நுனி

 த், ந்  - நாவின் நுனி, மேல்வாய்ப்பல்லின் அடி

---------------------------------------------------------------------------

 சிறுவினா

 1. எழுத்துகளின் பிறப்பு என்றால் என்ன? 

   உயிரின் முயற்சியால் உடலின் உள்ளிருந்து எழும் காற்றானது மார்பு, தலை, கழுத்து, மூக்கு ஆகிய நான்கு இடங்களுள் ஒன்றில் பொருந்தி, இதழ், நாக்கு, பல், மேல்வாய் ஆகிய உறுப்புகளின் முயற்சியினால் வேறுவேறு ஒலிகளாகத் தோன்றுகின்றன.  இதனையே எழுத்துகளின் பிறப்பு என்பர். 

2. மெய் எழுத்துகள் எவற்றை இடமாகக் கொண்டு பிறக்கின்றன?

     மெய் எழுத்துகள் நாக்கு ,அண்ணம் ,உதடு , பல் ,மேல் வாய் ,நாக்கின் நுனி ஆகியவற்றை இடமாகக் கொண்டு பிறக்கிறது .

 3. ழகர, லகர, ளகர மெய்களின் பிறப்பு முயற்சி பற்றி எழுதுக.

    ழ் - ஆகிய இருமெய்களும் மேல்வாயை நாக்கின் நுனி வருடுவதால் பிறக்கின்றன.

 ல் – இது மேல்வாய்ப் பல்லின் அடியை நாக்கின் ஓரங்கள் தடித்து நெருங்குவதால் பிறக்கிறது. 

 ள் – இது மேல்வாயை நாக்கின் ஓரங்கள் தடித்துத் தடவுதலால் பிறக்கிறது .


---------------------------------------------------------------------------

Comments

Popular posts from this blog

எட்டாம் வகுப்பு - தமிழ் - இயல் - 1 புத்தக வினாக்கள்| மொழியை ஆள்வோம்! |மொழியோடு விளையாடு |Tamil easy study

எட்டாம் வகுப்பு - தமிழ் - இயல் - 2-கவிதைப்பேழை - புத்தக வினாக்கள் | Tamil easy study

எட்டாம் வகுப்பு - தமிழ் - இயல் -1 புத்தக வினாக்கள் | Tamil easy study 6 ,7 ,8